சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திவ்யாவின் மூன்று வயது மகளும் ஒன்றரை வயது மகளும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர் இதுகுறித்து திவ்யாவின் கணவர் இளையராஜாவிடம் போலீசார் விசாரிக்கையில் மனைவிக்கு வயிற்று வலி இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்ய முயன்று இருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேசமயம் திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கிணற்றில் தவறி விழுந்த வர்ணிகாவை காப்பாற்ற நினைத்து பதற்றத்தில் கையிலிருந்த தன்ஷிகாவும் தானும் கிணற்றில் குடித்ததாக கூறியிருக்கிறார்.
இருவரது வேறுபட்ட பதில்களால் குழப்பம் நீடித்துள்ளது. இருந்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்