கனடாவில் வசிக்கும் முதியவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்த பரிந்துரைக்கப்பட வில்லை என்று தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கனடாவிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கவில்லை என்று நோய்த் தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனை குழு தெரிவித்திருந்தது.
அதன்பின் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் கனடாவிற்கு வரும் புதன் கிழமைக்குள் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி வந்து சேரும் என்று எதிபார்க்கப்படுகிறது.