2 கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷம்முபீவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு காதர்பாஷா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஷம்முபீவி தனது உறவினர் வீடான மீஞ்சூருக்கு சென்று விட்டு அவருடைய தங்கை மகன் அசாரின் காரில் வந்தவாசிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் கிராம ஏரிக்கரையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற சந்திரன் என்பவரது காரும், ஷம்முபீவி வந்து கொண்டிருந்த காரும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஷம்முபீவியும் அசாரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஷம்முபீவியை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே ஷம்முபீவி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அனக்காவூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.