இரண்டு வயது சிறுவர்கள் இருவர் குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஜெர்மன் நாட்டின் கிரேவன் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பிற்கு அருகில் இருந்த குட்டையில் இரண்டு சிறுவர்களின் சடலம் மிதந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்த சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு வயது என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தெரியவந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிறுவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் தவறி குட்டையில் விழுந்ததால் மரணம் அடைந்திருப்பது குழந்தைகளின் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே தெரிவித்துள்ளனர்.மூன்றாவது சிறுவன் வருவதற்கான சாத்தியம் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.