Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் மீட்பு….. விற்பனையா…? கடத்தலா…? திருச்சி அருகே பரபரப்பு…!!

திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள்  விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும்  குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டு பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில்,

சம்பந்தப்பட்ட இரு பெற்றோர்களிடம் விசாரித்தபோது அது தங்களுடைய குழந்தைகள் தான் என்று அவர்கள் தெரிவித்த தெரிவித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளிக்க இரண்டு குழந்தைகளையும் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர்கள் யார்? அவர்கள்  விற்கப்பட்ட குழந்தைகளா ? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |