Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து… 2 நாட்களில் முடிவு…!!!

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்க உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்ஐ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், கொள்கை ரீதியில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நிலையில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |