இந்திய-அமெரிக்க விண்கலங்கள் நிலவின் சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதை தவிர்த்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
நிலவின் சுற்றுப்பாதையில், இஸ்ரோவின் தயாரிப்பான சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மற்றும் நாசாவிற்குரிய லூனார் எல்ஆர்ஓ விண்கலத்தின் ஆர்பிட்டர் இரண்டும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலையில் இருந்திருக்கிறது. இரண்டு விண்கலங்களுக்கும் இடையில் 100 மீட்டருக்கும் குறைந்த இடைவெளி தான் இருந்துள்ளது.
ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் சேர்ந்து உடனடியாக அதனைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதால், மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.