Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணி குடிக்கத்தான் வந்துச்சு… திடீரென்று உள்ளே விழுந்தது… மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்…!!

தண்ணீர் குடிப்பதற்காக வாய்க்காலுக்கு சென்ற மாடுகள் தண்ணீரில் விழுந்து தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலின் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு கன்றுகுட்டிகள் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்துள்ளது. இந்த வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு இருப்பதனால் வெளியே வர முடியாமல் மாடுகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு நீண்ட தூரத்திற்கு நீந்தி சென்றுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளை கயிறு கட்டி தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |