தமிழக முதலவர் மாவட்ட ஆட்சியருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றார்.
கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற வில்லை. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியருடனான இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது , உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்றதா ? அதில் உள்ள குறைகள் மற்றும் சிரமங்களை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் விளக்க இருக்கின்றனர்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கி இருந்து பங்கேற்குமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.