நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மாற்றும் பாலாஜி ஆகிய 3 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2,700 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.