கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர். நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ கே.பி.பி சாமி 2006- 2011 தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக. மீனவர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். இவரின் மரணத்தில் இருந்து மீளாத திமுகவினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்றும் ஒரு மரன்னம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காத்தவராயன் உடல் நலம் குன்றி தற்போது காலமாகியுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்தில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில்அனைவருடைய பாராட்டையும் பெற்றவர். பல்வேறு விஷயங்களைப் பேசினார்.
முதல்முறையாக தனது கன்னிப் பேச்சை அருமையாக பேசினார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்து பாராட்டு தெரிவித்தார். குடியாத்தம் மக்களுடைய பல்வேறு பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் காத்தவராயன். அவர் வந்து தற்போது மறைந்துவிட்டார் என்ற செய்தி திமுக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்தடுத்து இரண்டு மரணங்களை சந்தித்த திமுகவின் பலம் தமிழக சட்டமன்றத்தில் 98ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவகமனையில் சிகிச்சை பெற்று வருவதால் யாரும் என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று திமுக தலைவர் தொண்டர்களுக்கு அறிவுத்தியது குறிப்பிடத்தக்கது.