Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

2 நாள் ….. 2 வீடு ….. ரூ 1 கூட இல்ல…. IT சோதனை எதற்காக ? பகீர் தகவல் …!!

நடிகர் விஜய் வீட்டில் தற்போது வரை வருமானவரித்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான  வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் , வீடு , நடிகர் விஜய் வீடு , அலுவலகம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் என சோதனை பட்டியல் நீள்கின்றது.

கடந்த தீபாவளி பண்டிகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். AGS நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் வசூலில் கோடி கோடியாக வசூல் செய்தது. வசூல் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து தயாரிப்பு நிறுவனமான AGS , படத்திற்கு பணம் கொடுத்து உதவிய பைனான்சியர் அன்பு செழியன் , விநியோகஸ்தர் என வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

இதில் நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற வருமானவரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. நேற்று தொடங்கிய இந்த சோதனை இரண்டாம் நாளாக நடந்து வருவது தமிழக சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் AGS நிறுவனத்தில் நேற்று 25 கோடி பணம் மற்றும் ஆவணக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் , இன்று அன்புசெழியனுக்கு சொந்தமான இடத்தில் 77 கோடி கைப்பற்றப்பட்ட்தாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதி படுத்தினர். ஆனால் இரண்டு நாளாக நடைபெறும் சோதனையில் விஜய் வீட்டில் ஒரு ஆவணம் கூட கைப்பற்றப்பட்டவில்லை.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் விஜய் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே சொல்கின்றார்கள். நாம் தமிழர் சீமான் கூறும் போது விஜயை விட ரஜினி அதிக சம்பளம் வாங்குகின்றார் அங்கே  ரெய்டு நடைபெற வில்லை என்று குற்றம் சாட்டினார். இதனால் இந்த ரெய்டு குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சோதனைக்கு AGS நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புசெழியனுக்கானது. ஆனால் அது சம்மந்தமாக விஜய் வீட்டில் சோதனை செய்வது முழுவதும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக விஜய் நடித்துக் கொண்டு இருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு வருமானவரித்துறை நேரில் சென்று உடனே விசாரணைக்கு வர வேண்டுமென்று விஜயை அழைத்து வர அவசரம் காட்டியது என பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.

சமீப காலமாக நடிகர் விஜய் தனது பட நிகழ்ச்சிகளில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அண்மையில் வெளியான பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆளும் மாநில அரசை கடுமையாக சாடினார். அதே போல சர்கார் படம் அதிமுக அரசை வெளிப்படையாக சீண்டினார். மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசை சாடினார் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே இந்த ரெய்டு என்று சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

அவசரஅவசரமாக விஜயை அழைத்து வந்து விஜயின் சாலிகிராமம் , நீலாங்கரை என இரண்டு வீடுகளிலும் கடந்த இரண்டு நாட்களாக , தற்போது வரை நடந்து வரும் சோதனை , விசாரணை என நடந்து  வந்தாலும் விஜய் வீட்டில் ஒரு ஆவணமோ , ஒரு ரூபாய் பைசாவோ கிடைக்கவில்லை என்பது அனைவரும் தெரியும்.

இதையும் படியுங்க :கெத்து காட்டி ”தெறிக்க விடும்” விஜய் புள்ளிங்கோ……!

Categories

Tech |