கடந்த இரண்டு நாட்களில் காலை மாலை என தங்கம் விலை குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் சில நாட்களாக குறைந்தது முன்னதாக 31 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம் மீண்டும் குறைந்தது. இந்நிலையில் இன்று காலை சரிந்த தங்கத்தின் விலை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
காலை மகிழ்ச்சியை ஏற்படுத்திய விலை குறைவு மாலையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று வாடிக்கையாளர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 குறைந்து ரூ 30,848க்கும், ஒரு கிராம் ரூ 38 குறைந்து 3,656 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. அதே போல வெள்ளி ஒரு கிராம் ரூ30 காசு குறைந்து 49.70க்கு விற்பனை ஆகின்றது.
ஏற்கனவே இன்று காலை கிராமுக்கு 17 ரூபாயும் , சவரனுக்கு 136 ரூபாய்யும் குறைந்து விற்பனையாகிய நிலையில் இரண்டாவது முறையான விலை குறைவு மக்களை ஆழ்ந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல நேற்றும் காலை , மாலை என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்படுத்திய தாக்கம் பொதுமக்களை இன்று வாங்கி இருக்கலாமே என்று ஏங்க வைத்துள்ளது.