Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள், 5 பேர்….. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!!!

புதுடெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் 40 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை இரண்டு நாட்கள் பூட்டி வைத்து தொடர்ச்சியாக வன்கொடுமை செய்துள்ளனர்.அதோடு பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியையும் சொருகி சித்திரவதை செய்துள்ளனர்.

2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு உள்ளான அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த கொடூரத்தை செய்து ஐந்து பேரும் பெண்ணுக்கு பழக்கமானவர்கள் என்பதுதான் மிகுந்த வேதனை. இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |