திருமணமாகி இரண்டு நாளில் வெளியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அசோக் அவசர வேலையாக பைக்கில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலையில் அசோக் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதால், ரத்த உள்ளத்தில் சாலையோரம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் அசோக் குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில், இதைக் கேட்டு அசோக் மனைவி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் அந்த இளம்பெண்ணின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அசோக்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய குடும்பத்தார் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.