Categories
காஞ்சிபுரம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அத்திவரதர் வைபவம் : போலீஸ்_க்கு 2 நாட்கள் விடுமுறை ….!!

அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

Seithi Solai

முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1_ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமல்லாமல்  பல்வேறு மாநிலங்களில்  இருந்தும்  ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு , நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

Image result for அத்தி வரதர் காவல்துறை

நேற்றோடு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டார். அத்திவரத்தர் வைபவம் தொடங்கிய நாள் முதல் நேற்றுவரை 500_க்கும் அதிகமான காவலர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் பணியாற்றிய திருவள்ளூர் போலீசாருக்கு இரண்டு நாள் விடுமுறையை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். அதில் அத்தி வரதர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவள்ளூர் போலீசாருக்கு ஊதியத்துடன் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் விடுமுறை என்று திருவள்ளூர் மாவட்ட எஸ் பி அறிவித்துள்ளார்.

Categories

Tech |