மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 40 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
லிபியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கு மத்திய தரைக்கடல் வழியாக சென்றனர். அப்போது அவர்களை ஏற்றி சென்ற கப்பலில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுவழியில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 65 பேர் உயிருடனும் 2 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து வந்த 40 பேர் மாயமாகி உள்ளனர். இது கடற்படையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.