Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 42ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 56 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக உள்ளது.

Categories

Tech |