Categories
உலக செய்திகள்

முறையற்ற சிகிச்சையால் உயிரிழந்த இருவர்.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார்.

மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்த மருத்துவர் தனக்கும் அந்த பெண்ணின் உயிரிழப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. அவரும், இதே போன்று ஒரு மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அந்த மருத்துவர் கீமோதெரபி சிகிச்சையை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். இயற்கை முறையில் சாப்பிடாமல் இருந்து சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவரின் ஆலோசனைப்படி, கீமோதெரபி சிகிச்சையை நிறுத்திய அந்த நபர், புற்றுநோய் தீவிரத்தால் உயிரிழந்தார். தற்போது அவரின் மனைவி அந்த மருத்துவர் மீது புகார் தெரிவித்துள்ளார். பிரான்சில் இயற்கை முறையில் மருத்துவம் அளிக்கவும் மருத்துவர்கள், மருந்துகள் வழங்கவும், நோய்களை கண்டறிந்து கூறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |