Categories
உலக செய்திகள்

2 டிரில்லியன் டாலர் செலவில் புதிய திட்டம்…. ஜோ பைடன் அறிவிப்பு…!!!

கொரோனா பாதிப்பின் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

கொரோனா பாதிப்பு கடந்த வருடம் நாடு முழுவதும் பரவியது. இதில் அமெரிக்கா அதிக பாதிப்பை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  அமெரிக்கா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதிபர் ஜோ பைடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்த உள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்றவைகளுக்காக 2 டிரில்லியன் டாலர்கள் செலவில் திட்டத்தை செயல் படுத்த இருப்பதாக கூறியுள்ளார். அதிபர் ஜோ பைடன் அவரின் திட்டம் குறித்து பென்சில்வேனியாவின்  பிட்ஸ்பர்க்கில் கூறியபோது உள்கட்டமைப்பு வசதிகள் தொற்று பாதிப்பு மற்றும் தட்பவெட்ப மாற்றம் போன்றவற்றினால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில்  பெரிய அளவில் சரிவு  ஏற்பட்டுள்ளது.

ஆகையால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மிக முக்கியம் . இதுவரை இல்லாத அளவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் மிகப்பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக அமெரிக்கா திகழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறினார்.

இதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்தார் . இரண்டாம் உலக போர் முடிந்த பின் அமெரிக்கா வேலைவாய்ப்பை உருவாக்க அதிக முதலீடு செய்தது அதன் பிறகு தற்போது தான் 2 ட்ரில்லியன் டாலர் அளவில் உள்கட்டமைப்பிற்கும் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காகவும்  அதிக முதலீடு வழங்கியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |