பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பிரக்யா ஜெய்ஸ்வால் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அகந்தா படத்திலும், ஹிந்தியில் சல்மான்கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்க்கு கொரானா அறிகுறி இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது குறித்து பிரக்யா கூறும்போது, நான் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். ஆனாலும், எனக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதால் நான் என்னை தனிமை படுத்திக்கொண்டேன் என கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி போடுவதற்கு முன்பாகவே எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும், தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்ததாகவும் கூறினார். தற்போது லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனவே, என்னுடன் பணியாற்றிய அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ளுமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.