சாலையில் சென்று கொண்டிருந்த சர்க்கரை மூட்டை லாரி ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மகேஷ் என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநராக சிவசங்கர் என்பவர் வந்துள்ளார். இதனை அடுத்து இரட்டைப் பாலம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.
இதில் 2 ஓட்டுனர்களும் காயமடைந்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த சுங்கவாடி படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று 2 ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் இவ்விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.