இலங்கையில் உயிரிழந்த 2 யானைகளின் வயிற்றில், கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் கொழும்பு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளில் அலைந்து கொண்டிருக்கும் யானைகள் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன. இதனால், அவற்றின் வயிற்றில் அந்த கழிவுகள் தேங்கி, அஜீரணம் போன்ற பாதிப்புகள் உண்டாகி, யானைகள் உயிரிழக்கிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும், அந்நாட்டில் கடந்த 8 வருடங்களில் மட்டும் சுமார் 20 யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதால் இறந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.