துபாயில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலையில் Gulf Air மற்றும் FlyDubai ஆகிய 2 விமானங்களும் திடீரென்று ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுளள்ளது. அதாவது விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லக்கூடிய சாலையில் மோதியிருக்கிறது. இதில், FlyDubai என்ற விமானத்தின் இறக்கை, மற்றும் Gulf Air என்ற விமானத்தின் பின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிர்ஷ்டவசமாக இதில் ஒருவரும் காயமடையவில்லை. எதனால் விபத்து ஏற்பட்டது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு அந்த விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை 2 மணி நேரங்களுக்கு அடைக்கப்பட்டதால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.