நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர்.
நாமக்கல் பகுதியில் இரவில் சோளத்தட்டு பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் அதில் உள்ள இனிப்பு சுவை மாறாமல் இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் இதன் அறுவடை பணி இரவிலேயே நடைபெறுகிறது. கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சை சோளத்தட்டு என்பது கால்நடைகளுக்கு பிரதான தீவனமாக உள்ளது.
நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டுமே துணையாகக் கொண்டு அறுவடை பணியை செய்கின்றனர் பெண்கள்.. பகல் நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வயலில் சுற்றித்திரியும் அபாயம் உண்டு. இந்நிலையில் இரவில் உயிரை பணயம் வைத்து இந்த வேலையை செய்கின்றனர். விஷ உயிரினங்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சக ஊழியர்களுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகாலை 5 மணி வரை அறுவடை செய்யப்பட்ட சோளத்தட்டு கட்டுகளாக கட்டப்பட்டு சேலம் நாமக்கல் தஞ்சாவூர் என பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஒரு பிடி சோளத்தட்டு அறுவடை செய்ய இரண்டு ரூபாய் கூலியாக பெரும் பெண்கள் பிறகு காலை 9 மணிக்கு மேல் வழக்கமான பணிகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.