Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வு… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு… வெளியான தகவல்…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்பித்தார்.

இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் +2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களின் கருத்தின் அடிப்படையில் விரிவான அறிக்கையை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் நாளை பிளஸ் 2 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |