ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. அந்நாட்டின் அரசாங்கத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்களை தான் அந்த சிறையில் அடைப்பார்கள்.
அந்த சிறையை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். ஈரான் நாட்டில் தற்போது வரை ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டங்கள் முடிவடையவில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இளம்பெண்கள் இருவர் ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதானது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.