ஹாங்காங்கில் குதிரை பந்தயத்தில் கலந்து கொண்ட 2 குதிரைகள் பலத்த காயங்களுடன் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன.
ஹாங்காங்கில் உள்ள ஷா டின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச குதிரை பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தின் போது தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வீராங்கனையான லைல் ஹெவிட்சன் ஓட்டி சென்ற குதிரை எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தது.
அதனைத் தொடர்ந்து மூன்று குதிரைகள் விழுந்து கிடந்த குதிரையின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தன. இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குதிரைகள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த காயமடைந்த வீராங்கனைகள் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.