Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை” மதுரை RC வாக்குசாவடி இயந்திர கோளாறு…!!

மதுரை உசிலம்பட்டி  ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் சுமார் 2 மணிநேரமாக வாக்குப்பதிவு நடைபெறாமல் உள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பழுது ஏற்பட்டதால்  அதில் இன்னும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  சுமார் 2 மணிநேரமாகவே தொடங்காமல் உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |