சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, உலகளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 54 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலக நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ்,இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடக்கத்தில் சீனாவை தாக்கியிருந்தாலும், பாதிப்பு என்பது மற்ற நாடுகளை போல அல்ல. மேலும், புதிதாக சீனாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,944 ஆகும். மேலும் ஒரே நாளில், 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்.