2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியான்குப்பம் வடக்கு தெருவில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் கவுசல்யா கல்லூரியில் இளங்கலை 2-ஆம் வருடமும், பிரியதர்ஷினி நெய்வேலியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பிரியதர்ஷினி உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.