அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார்.
இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையில் கடந்த 5ஆம் தேதியன்று இருவரும் அமேசான் காட்டிலுள்ள ஒரு கிராமத்திற்கு படகில் சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் திரும்பவில்லை.
எனவே, பழங்குடியின மக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து இருவரையும் தேடினர். இந்நிலையில் காணாமல் போன இரண்டு பேரும் கொல்லப்பட்டு காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பில் காவல்துறையினர் 2 நார்களை கைது செய்திருக்கிறார்கள்.
அதாவது, அமேசானில் இருக்கும் ஒரு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக அவர்கள் மீன் பிடித்ததை இருவரும் கண்டித்ததால் அவர்களை கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. கைதான 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.