சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய போராட்டக்காரர்கள் மீது நடந்த ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் குழப்பம் நிலவிவருகிறது.இந்நிலையில் கூட்டத்தை களைக்க துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசியதில் கலவரமாகி 2 பேர் கொல்லப்பட்டனர் .