2 கொலை வழக்குகளில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகாமையில் போட்டோகிராபர் பீட்டர் கொலை மற்றும் அருளானந்தம் கொலை ஆகிய இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஏழு வருடங்களாக தலைமறைவாக இருந்த பரமகுரு என்பவரை பிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பரமகுரு பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் பரமகுருவை கைது செய்து சங்கரபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.