2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இதன் அருகாமையில் விநாயகர் கோவிலும் அமைந்திருக்கிறது. அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் 2 கோவில்களிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல்களில் இருந்த 12,000 ரூபாய் மற்றும் அம்மன் சிலையில் இருந்த வெள்ளை குண்டுமணி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கோவிலில் திருட்டு நடந்ததை அறிந்ததும் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிலில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.