2 குழந்தைகளை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருப்பர்கோவில் பட்டி பகுதியில் பொன்னு அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீசன் மற்றும் 8 மாத குழந்தை தர்ஷினியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பொன்னு அடைக்கன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து பஞ்சு செல்போனில் தொடர்பு கொண்டு பொன்னு அடைக்கனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்படி வீட்டிற்கு என்றால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன்பிறகும் பொன்னு அடைக்கன் வீட்டிற்கு வராததால் ஆத்திரமடைந்த பஞ்சு தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் பொன்னு அடைக்கன் வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பொன்னு அடைக்கன் பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.