Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்திய நபர்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 மாணவியை கடத்தி 2-வது முறை திருமணம் செய்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 23-ஆம் தேதி கடைக்கு போவதாக சென்ற மாணவி பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணை கொட்டாய் பகுதியில் வசித்துவரும் தம்பிதுரை என்பவர் மாணவியை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திச் சென்றவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தம்பிதுரைக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதில் தம்பிதுரை சொந்தமாக லாரி வைத்திருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை கடத்திச் தம்பித்துரை 2- வது திருமணம் செய்து விருதுநகர் அருகே பாதரக்குடி பகுதியில் குடும்பம் நடத்தி வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விரைந்து சென்று தம்பித்துரையை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன்பின் அந்த மாணவியை காவல்துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |