Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்…. போக்குவரத்து பாதிப்பு…. போலீஸின் செயல்….!!

2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதால் சிப்காட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் சாலையில் பெங்களூரிலிருந்து கேஸ் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த டேங்கர் லாரியும், அதே போல் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிகளை ஓட்டி வந்த கவுடா, சின்னராசு ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

பின்னர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |