Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 லாரிகள் மோதல்…. போக்குவரத்து பாதிப்பு…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் லாரிகளில் இருந்து டீசல் கசிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இது பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படாமல் தடுத்து, விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |