Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மொத்தமாக 2 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் தற்போது வரை இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.

உக்கரை நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது வரை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியாக இருக்கும் ஜென் மார்க், ரஷ்யா உக்ரைனில் மேற்கொண்ட போரில் 40 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இரண்டு நாடுகளிலும் ராணுவ வீரர்கள் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் மூலமாக பரஸ்பர அமைதி கிடைத்து விடாது. அதற்கு நீங்கள் வேறு வழிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |