சுவிட்சர்லாந்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், Hinteregg என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அவ்வழியாக சென்ற ஒருவர் உயிரிழந்தவரின் உடலையும் அவரது மோட்டார் சைக்கிளையும் கண்டுபிடித்துள்ளார்.
இதில் உயிரிழந்த நபர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்றும், பல வாரங்களாக அவரது உடல் காட்டில் கவனிக்காமல் விடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள். எனினும் விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர். இதனிடையில் சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி காரணமாக, அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சுமார் 3 மணி நேரம் அடைக்கப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.