Categories
உலக செய்திகள்

கிராமத்திற்கு 2 மில்லியன் நன்கொடை… உயிரிழந்தவரின் உயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற  கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தோம்.

1950 வரை நாங்கள் கிராம மக்களால் அதே கிராமத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தோம். அதன்பின் நான் மருத்துவம் பயின்றேன். ஆகையால் இரண்டாம் உலகப்போரின் போது எங்களை பாதுகாத்துக் காப்பாற்றிய கிராமத்திற்கு எனது சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை நன்கொடையாக அளிக்கிறேன். மேலும் இத்தொகையை அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கும் இளைஞர்களின் முயற்சிக்கும் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார்.

எரிக் ஸ்வாம், வரலாற்று சிறப்புமிக்க இந்த சம்பவத்தை நினைவூட்டி நன்றிக்கடன் செலுத்தியுள்ளது நெகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டாம் உலகப்போரின்போது அந்த கிராமத்தினர் சுமார் 2500 யூதர்களை காப்பாற்றிக் பாதுகாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |