நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா ராமதாஸ் வந்தால் என்னாளு என்று கேப்பான், ஐயா திருமாவளவன் வந்தால் என்னாளு கேட்பான், சீமான் வந்தா என்னாளு கேட்பான், கார்த்திக் வந்தா என்னாளு, சரத்குமார் வந்தா என்னாளு, ஆனா ஸ்டாலின் வந்தா நம்ம ஆளு. ஏன் சாதி தான் தமிழர் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால் ? தமிழ் பெருங்குடி இனத்து பிள்ளைகளே உங்களிடம் சொல்றேன்..
ஆந்திராவில் சந்திரசேகர் ராவ் போட்டுக்கிடுவான். ரெட்டியின் பெயர் போட்டுகிடுவான். ஜெகன் மோகன் ரெட்டி என போட்டுக்குவான். ஆனால் சாதிக்கு கட்சி வெச்சி இருக்க மாட்டான், நல்லா கவனிச்சுக்கணும். மேனன் என பெயர் வெச்சிருப்பான், நாயர் என்று பெயர் வைத்திருப்பான். ஆனால் அவன் ஒருபோதும் சாதி கட்சி வச்சது இல்லை. இவன் ஜாதிக்கு பின்னாடி பெயர் போட மாட்டான். ஆனால் தெருவுக்கு இரண்டு கட்சி சாதி கட்சி இருக்கு.
ஐயா ஸ்டாலின் அவர்கள் உங்க குடிகளின் எண்ணிக்கையை எண்ணுங்க. கோனாருக்கு 2, உங்க குடும்பம்… உங்க வீட்டிலேயே 2 அமைச்சர். இது என்ன சமூக நீதி ? சமூக நீதிதான் திராவிடம்.. சமூக நீதி திராவிட மாடல்…. சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் கொண்டு போறோம். வீட்டை விட்டே நகரலையே சமூக நீதி. ஜெகன்மோகன் ரெட்டி கிட்ட பேசி இல்ல, உங்க நண்பர் சந்திரபாபு நாயுடு கிட்ட பேசி… ஹேய்.. உங்க ஆளுகளுக்கு எல்லாம்…. நீங்க அப்படி சொல்ல மாட்டீங்களே… நம்ம ஆளுகளுக்கு எல்லாம் இவ்வளவு கொடுத்திருக்கேன். அதனால நீ ஒன்னு செய்பா… ஏய்… தமிழர்கள் அங்க இருக்குறவனுக்கு எண்ணி, அங்க கொஞ்சம் இடஒதுக்கீடு கொடுப்பா என சொல்லுங்க என தமிழக முதல்வர் ஸ்டாலினை சீமான் விமர்சித்தார்.