Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் அலட்சியத்தால் 3 மாத குழந்தை உயிரிழப்பு..!

தமிழகத்தில் உசிலம்பட்டி அருகே தாய் தனது 3 மாத குழந்தையை குளிக்க வைக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (30) – காலாவதி (25) இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு யுவஸ்ரீ(2) மற்றும் மோனிஷா  என்ற 3மாத குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூரில் தனியார் கம்பெனி ஒன்றில்  வேலை செய்து வந்ததால் கலாவதி அவரவரது  தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கலாவதியின் தாய் வெளியே சென்ற தருணத்தில் குழந்தையை குளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது குழந்தை திடீரென மூச்சடைத்து செயலற்று இருந்துள்ளது.

இதனால் பயந்துபோன தாய் உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |