Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“2 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை”… 3 மணி நேரத்தில்…தஞ்சாவூர் டூ கோவை… தீயாய் பறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..!!

தஞ்சாவூர் பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 3 மணி நேரத்தில் கோவை சென்றடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மகன் ஆருரன். இவர் பிறந்து இரண்டு மாதங்களே ஆகிறது. ஆருரன் இதயம் வீக் ஆகி உள்ளதால் தஞ்சாவூரில் குழந்தையை பரிசோதனை செய்த தனியார் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து குழந்தையை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவருடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டதில் தொடர்ந்து சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்த்து 3 மணி நேரத்திற்கு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். அந்த வேலையை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பார்த்தசாரதி என்பவர் முன்வந்தார். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் பயணிக்கும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மாற்றி திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் உதவி பெறப்பட்டது.

அதன்படி வாகனம் கடக்கும் அனைத்து சாலைகளிலும் பல சிக்னல்களை நிறுத்தி சாலையை வேகமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அதிகாலை 5 35 மணிக்கு துவங்கப்பட்ட இந்த பயணம் 8:30 குப்புசாமி நாயுடு மருத்துவமனை சென்றடைந்தது. குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தையின் அறுவை சிகிச்சை தற்போது மருத்துவர்களால் நடைபெற்றது. இந்த குழந்தையை நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் செல்ல வேண்டும் என அனைத்து வாகன ஓட்டுநர்களும் வேண்டுதல் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் ஓட்டுநர் பார்த்தசாரதி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |