தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.