இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1,500 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையல், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னைக்கு திரும்பிய பலருக்கு கொரோனோ தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்கள் வசித்து வரும் தெருக்கள், அதை சுற்றியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று திருவல்லிக்கேணி பல்லப்பன் தெரு மற்றும் ராயப்பேட்டை ஜவகர் உசேன் தெரு ஆகிய இரண்டு பகுதிகளும் சீல் வைக்கப்பட்டன. ஏற்கனவே, புளியந்தோப்பு , எண்ணூர், தண்டையார்பேட்டை நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய 8 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.