மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இச்சிப்பட்டி பிரிவு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பசுபதிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் காரை ஓட்டி வந்த பரமசிவம் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.