Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலையூர் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் மழையூர் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொருவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சேட்டுவின் மகன் சந்தோஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |