மராட்டிய மாநிலத்தில் 2 முறை கொரோன தொற்று ஏற்பட்ட 90 வயது முதியவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் பீட் மாவட்டத்தில் பாண்டுரங் ஆத்மராம் என்ற (90 )முதியவர் வசித்து வருகிறார். இவர் 2 முறை கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் . உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் இந்த நோயை எதிர் கொள்வதற்கு சில வழிகளையும் அனுபவத்தையும் கூறியுள்ளார்.
மேலும் இந்த முதியவர் 2 முறையும் கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இக்கொடிய கொரோனா தொற்று குறித்து ” முதல் முறை நோய் தொற்றுக்கு ஆளாகும் போது குறைவான அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் 2 -வது முறையில் தொற்றிலிருந்து வெளிவர எளிதாக முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் எளிதில் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். ஆரோக்கியமாக இருப்பதற்கான எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நான் தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்கிறேன். மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்து வரும் காரணத்தினால் கொரோனா பாதிப்பிலிருந்து என்னை மிக எளிய முறையில் வெளிக்கொண்டு வந்தேன்” என்று கூறினார்.
மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் போதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததாகவும் உணவு மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில் “பாண்டுரங் ஆத்மராம் இந்த வயதிலும் அவர் மன அளவில் மிக வலுவாக இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக கூறினார். அவரின் மனவலிமையை கொரோனா தொற்றை தோற்கடித்துள்ளது” என்றும் கூறினார்.